தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஜோதிகா. தமிழில் வாலி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து குஷி, சந்திரமுகி, பேரழகன், டும் டும் டும், தூள் என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழி படங்களிலும் கதாநாயகியாக பல படங்களில் நடித்துள்ளார். நடிகையாக உச்சத்தில் இருந்த நேரத்தில் நடிகை ஜோதிகா நடிகர் சூர்யாவை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

அவர் சூர்யாவுடன் ஜோடியாக ஏழு படங்களில் நடித்துள்ளார். பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்கா காக்கா, பேரழகன், மாயாவி, ஜூன் ஆர் மற்றும் சில்லு ஓரு காதல். ஆனால், இருந்தாலும் 8 வருடம் கழித்து மீண்டும் நடிக்க வந்து அசத்திவிட்டார். ஜோதிகா 36 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுத்தார்.
அதன்பின்னர் மகளிர் மட்டும், நாச்சியார், தம்பி, செக்க சிவந்த வானம், காற்றின் மொழி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் ராட்சசி படத்திற்காக விருது வாங்கினார். அந்த விருது மேடையில் கோவில்களுக்கு செலவு செய்யும் பணத்தை மருத்துவமனைக்கும் கொஞ்சம் கொடுக்கலாம் என்று சொன்னார். அது பெரிய சர்ச்சையாக தற்போது தஞ்சாவூர் மருத்துவமனை வளர்ச்சிக்கு ரூ 25 லட்சம் பணம் கொடுத்துள்ளார்.