நடிகை சித்ராவின் மரணம் பற்றி பேசிய அனிதா சம்பத்! ரசிகர்களின் பிக்பாஸ் குறித்த கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லிருக்கிறார் தெரியுமா?

செய்தி வாசிப்பாளராக மக்களிடையே பிரபலமானவர் அனிதா சம்பத். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கடந்த வாரத்தில் வெளியேறினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய சில நாட்களில் இவரது தந்தையும் காலமாகினார். இதனால் மிகுந்த வருத்திலேயே காணப்பட்டார். சமீபத்தில் அனிதா சம்பத் தனது ரசிகர்கள் அனுப்பிய சில மெசேஜ்களுக்கு பதில் அளித்து இருந்தார். பிக் பாஸ் உள்ளே நடந்ததை அணைத்தையும் மறந்து நீங்கள், சனம், ஆரி ஆகிய மூவரும் நல்ல நண்பர்களாக இருங்கள் என்று மெசேஜ் அனுப்பி இருந்தார்.

அதற்கு பதில் அளித்த அனிதா சம்பத், ஆமாம், ஆரி மற்றும் சனம் எப்போதும் என்னுடைய நல்ல நண்பர்களாக இருப்பார்கள். ஆரியை நான் பின்னால் கிண்டல் செய்தது ஆரியை கோவமோ சண்டையோ நான் நேரா சொல்லிடுவேன். நாங்கள் மிகவும் அன்பாகவும் சந்தோசமாகவும் இருந்தோம் ஆனால், எங்களுடைய சண்டை தான் அதிகம் காண்பிக்கப்பட்டிருக்கிறது.

எங்கள் மூவருக்கும் என்ன வகையான உறவு இருந்தது என்பது எங்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளார் அனிதா. மேலும், தற்கொலை செய்துகொண்ட விஜே சித்ராவை பற்றி கேட்டதற்கு, ரொம்பவே ஷாக் ஆகிட்டேன் அவரை தனிப்பட்ட விஷயத்தில் எனக்கு தெரியாது. ஆனாலும் ரொம்பவே கஷ்டமா இருந்தது என கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published.