வனமகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சாயிஷா ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தார் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடித்து நடிகை சாயிஷா, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். தமிழில் ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்தில் நடித்தார் சாயிஷா. அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் மீண்டும் இணைந்து டெடி படத்தில் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் நடிகை சாயிஷா தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு சாயிஷாவும் ஆர்யாவும் நெருக்கமாக உள்ள க்யூட் ரொமான்டிக் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. லாக்டவுன் நேரத்தில் வீட்டுக்குள்ளேயே இருந்து போரடித்த போன சாயிஷாவும் ஆர்யாவும் மொட்டை மாடியில் குடும்பத்துடன் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டனர்.
இந்நிலையில் நடிகை சாயிஷா வெறித்தனமா குத்துச்சண்டை போடும் நடிகை சாயிஷாவின் காணொளிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. நடிகை சாயிஷா குத்துச்சண்டை கற்று கொள்ளும் காணொளியை அவரின் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதேவேளை, நடிகை சாயிஷாவின் காணொளிகளை வைரலாக்கி வருகின்றனர்.
View this post on Instagram