நடிகை சரண்யா பொன்வண்ணன் மகளுக்கு நிச்சயம் முடிஞ்சாச்சு! வெளியான புகைப்படம்.. குவியும் வாழ்த்துக்கள்

உலக நாயகன் கமலஹாசன் நடித்த நாயகன் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர் பெரும்பாலான திரைப்படங்களில் கதாநாயகனுக்கு அம்மா வேடத்தில் நடிக்கத் தொடங்கினார். ஒரு கல் ஒரு கண்ணாடி, முத்துக்கு முத்தாக, வேலையில்லா பட்டதாரி, ரெமோ, கொடி போன்ற பல்வேறு படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார் நடிகை சரண்யா பொன்வண்ணன்.

தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த 1995-ம் ஆண்டு இயக்குனரும், நடிகருமான பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து, சரண்யாவிற்கு பொன்வண்ணன் உடன் திருமணமாகி பிரியதர்ஷினி, சாந்தினி என்ற இரண்டு மகள்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சரண்யாவின் மூத்த மகள் பிரியதர்ஷினுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

அண்மையில் உறவினர்கள் மற்றும் நெருக்கமான நண்பர்கள் முன்னிலையில் பிரியதர்ஷினுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!