தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா. தமிழில் மட்டுமல்ல தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக விளங்கும் இவருக்கு, ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் தான். பானா காத்தாடி படத்தின் மூலம் பிரபலமாகியவர். தற்போது முன்னணி நடிகரான விஜய், சூர்யா,அதர்வா மற்றும் தனுஷ் ஆகியோருடன் இணைத்து நடித்து வருகிறார்.

இவர் தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் நாகா அர்ஜுனின் மகன் நாகா சைத்தனியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அந்த வகையில் அடுத்தடுத்த அவரது நடிப்பில் வெளிவர பல படங்கள் வெயிட்டிங். நடிகை சமந்தா தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் எனும் படத்தில் கதாநாயகியாக கமிட்டாகி இருக்கிறார்.
சமீபத்தில் தனது கணவருடன் தெலுங்கு நடிகர் ராணா டகுபதி திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். அதில், சிம்பிளான புடவையில் கிராண்டான லுக்கில் இந்த திருமணத்தில் பங்கேற்றுள்ளார் சமந்தா. அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகின்றன. சமந்தா அழகு தேவதை போல ஜொலிப்பதாக அவரது ரசிகர்கள் கமெண்ட்டுகளில் கூறி வருகின்றனர்.
View this post on Instagram
When in doubt .. wear @raw_mango ?.. @sheetalzaveribyvithaldas .. styled @jukalker ? @eshaangirri