தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை சமந்தா. தமிழில் மட்டுமல்ல தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக விளங்கும் இவருக்கு, ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் தான். பானா காத்தாடி படத்தின் மூலம் பிரபலமாகி தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவர் முன்னணி நடிகரான விஜய், சூர்யா,அதர்வா மற்றும் தனுஷ் ஆகியோருடன் இணைத்து நடித்து வருகிறார்.
சமந்தா 2012 ஆம் ஆண்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவியை வழங்குவதற்காக தனது சொந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான ப்ரத்யுஷா சப்போர்ட்டையும் தொடங்கினார். இவர் தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் நாகா அர்ஜுனின் மகன் நாகா சைத்தனியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
அந்த வகையில் அடுத்தடுத்த அவரது நடிப்பில் வெளிவர பல படங்கள் வெயிட்டிங். நடிகை சமந்தா தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் எனும் படத்தில் கதாநாயகியாக கமிட்டாகி இருக்கிறார். இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் வாழந்து வரும் அழகிய பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா. இதோ புகைப்படங்களுடன்…