நடிகை கௌதமியின் மகள் ஹீரோயின் ஆகிறாரா.. எப்படி இருக்கிறார் தெரியுமா? புகைப்படம் உள்ளே…

தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை கௌதமி. பின்பு அனைத்து மொழிகளிலும் கொடிகட்டி பறந்தது மட்டுமின்றி, பல முன்னணி நடிகர்களுடன் நடித்து இன்றும் ரசிகர்களின் மனதில் நிலையான இடத்தனைப் பெற்றுள்ளார். நடிகை கவுதமி குருசிஷ்யன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர்.

75 படங்களுக்கு மேல் நடித்த இவர் சந்தீப் பாட்டியா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். மறு ஆண்டே இவர்களுக்கு சுப்புலட்சுமி என்ற மகள் பிறந்தார். ஆனால் திருமணமான சில வருடங்களிலேயே கணவரை விவாகரத்து செய்த கௌதமி, மகள் சுப்புலட்சுமியுடன் சென்னை வந்து, மீண்டும் நடிக்கத் தொடங்கினார். படவாய்ப்பு கிடைக்காததால் சின்னத்திரை சீரியல்களில் நடித்தார்.

பின்பு உடல்நிலை சரியில்லாமல் இருந்த இவரை, நடிகர் கமல்ஹாசன் பார்த்து வந்தார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் திருமணம் செய்துகொள்ளாமல் கமலுடன் வாழ்ந்து வந்தார். பின்பு ஒரு சில காரணங்களுக்காகவும், மகளின் வருங்காலம் கருதியும் கமலை விட்டு விலகுவதாக டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார். தற்போது கெளதமியின் மகளுக்கு 21 வயது ஆகிறதாம். மகளை நடிகையாக்கும் முயற்சியில் கௌதமி ஈடுப்பட்டுள்ளாராம். இந்நிலையில் அவரது புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.