நடிகை காஜல் அகர்வால் கணவருக்கு இரண்டு மனைவிகளா? வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தென்னிந்திய நடிகைகளுள் மிகவும் பிரபலமான ஒருவர் தான் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகில் நான் மஹான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, விவேகம் மற்றும் தற்போது உலக நாயகன் கமல் ஹாசன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவருக்கு எல்லா மொழிகளிலும் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். இவர் அவரது அற்புதமான நடிப்பினால் மட்டுமின்றி, அழகாலும் ஏராளமான ரசிகர், ரசிகைகளைக் கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் நிறைய நாயகிகள் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள். ஒருபக்கம் தங்களது ஆசை நாயகி சிங்கிளாக இருக்கிறார் என்று நினைத்தாலும் அவர்களுக்கு எப்போது கல்யாணம் என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் உள்ளது.  சமீபத்தில் தனது நீண்ட கால நண்பரான கவுதம் என்பவரை திருமணம் செய்யப்போவதாக அறிவித்தார். பின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இவர்களுக்கு அக்டோபர் 30ம் திருமணம் முடிந்தது.

அடுத்து இருவரும் மாலத்தீவுகளுக்கு சுற்றுலா செல்ல அந்த புகைப்படங்கள் வைரலானது. இந்த நிலையில் கௌதம் சிங்கப்பூரில் இருக்கும் காஜலின் மெழுகு சிலையுடன் தனது மனைவியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் இரண்டு மனைவிகளுடன் புகைப்படம் எடுத்துள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *