நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம்! தேதியை அறிவித்து ட்விட்டரில் பதிவு!! வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்..

தென்னிந்திய நடிகைகளுள் மிகவும் பிரபலமான ஒருவர் தான் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகில் கார்த்தியின் நான் மஹான் அல்ல, சூர்யாவின் மாற்றான், விஜயின் துப்பாக்கி, தனுஷின் மாறி, அஜித்தின் விவேகம் மற்றும் தற்போது உலக நாயகன் கமல் ஹாசன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவருக்கு எல்லா மொழிகளிலும் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர்.

இவர் அவரது அற்புதமான நடிப்பினால் மட்டுமின்றி, அழகாலும் ஏராளமான ரசிகர், ரசிகைகளைக் கொண்டுள்ளார். நடிகை காஜல் அகர்வாலுக்கு எப்போது திருமணம் என ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர். அதோடு மேக்கப் போடாமலும் அழகாக காட்சியளிக்கும் நடிகைகளுள் ஒருவரும் கூட. நேற்று (அக்டோபர் 5) காஜலின் திருமணம் பற்றிய செய்தி வந்தது, ஆனால் அவர் எதுவும் கூறாமல் இருந்தார்.

இந்த நிலையில் காஜல் அகர்வால் தனது டுவிட்டரில் எனக்கு தொழிலதிபர் கௌதம் என்பவருடன் அக்டோபர் 30ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது என கூறியுள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் சிலருக்கு சந்தோஷம் என்றாலும் நம் காஜலுக்கு திருமணமா என்றும் வருத்தம் அடைந்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published.