நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணமா? மாப்பிள்ளை இவர் தானா? வெளியான புகைப்படம் இதோ..

தென்னிந்திய நடிகைகளுள் மிகவும் பிரபலமான ஒருவர் தான் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகில் கார்த்தியின் நான் மஹான் அல்ல, சூர்யாவின் மாற்றான், விஜயின் துப்பாக்கி, தனுஷின் மாறி, அஜித்தின் விவேகம் மற்றும் தற்போது உலக நாயகன் கமல் ஹாசன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

 

இவர் அவரது அற்புதமான நடிப்பினால் மட்டுமின்றி, அழகாலும் ஏராளமான ரசிகர், ரசிகைகளைக் கொண்டுள்ளார். இவருக்கு 35 வயதாகிவிட்டது. முக்கியமாக இன்னும் இவருக்கு திருமணமாகவில்லை. அதோடு மேக்கப் போடாமலும் அழகாக காட்சியளிக்கும் நடிகைகளுள் ஒருவரும் கூட. சமீபத்தில் நடிகை காஜல் அகர்வாலுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக தெலுங்கு திரை வட்டாரங்களில் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த லாக் டவுன் முடிந்தவுடன் கௌதம் என்பவரை திருமணம் செய்துகொள்ள போகிறாராம் நடிகை காஜல் அகர்வால். இவர்கள் திருமணம் மும்பையில் மிகவும் பிரபமாண்டமாக நடைபெறும் என்று தெரிவிக்கின்றனர். மேலும் இந்த செய்தி திரையுலக வட்டாரங்களிலும் முன்னணி பாலிவுட் நாளிதழ்களிலும் பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதோ கௌதமின் புகைப்படங்கள்..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!