நடிகை கஸ்தூரியின் மகளா இவங்க..? அம்மாடியோவ் என்ன அழகு : வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்

கஸ்தூரி (பிறப்பு: மே 1, 1974) என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் 1992 ‘மிஸ் மெட்ராஸ்’ அழகிப் போட்டியில் வென்றுள்ளார். 1991 ஆம் ஆண்டு முதல் ஆத்தா உன் கோயிலிலே, ராசாத்தி வரும் நாள் (1991), சின்னவர் (1992), செந்தமிழ்ப் பாட்டு (1992), அமைதிப்படை (1994) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மற்றும் 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் தமிழ் 3 என்ற நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார்.பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சி பெற்றார். இவருக்கு ரவிக்குமார் என்ற கணவரும் மற்றும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் கஸ்தூரி.இவர் சத்யராஜ், பிரபு, கார்த்திக் என பல பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

மேலும் கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடம் பிரபலமானார்.சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் கஸ்தூரி அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என எவருக்கும் அஞ்சாமல் பல பிரச்சினைகளுக்கு வெளிப்படையாக தனது கருத்துக்களை கூறி சர்ச்சையில் சிக்கி வருகிறார். நடிகை கஸ்தூரி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளிலும் கலக்கியவர்.

திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவர் பங்குபெற்றுள்ளார்.பிக்பாஸ் 3வது சீசனில் இவர் நடுவில் சென்று நிகழ்ச்சியில் பங்குபெற்றதை நாம் பார்த்தோம். எல்லா விஷயங்கள் குறித்தும் தைரியமாக பேசும் கஸ்தூரி தனது குடும்ப புகைப்படங்களை இதுவரை வெளியிட்டது இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!