நடிகை ஓவியா தனது தீவிர ரசிகையை இழந்தார்..! தகவலறிந்து அவர் செய்யவிருக்கும் செயல் இதுதானா?

பிரபல தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிய நிகழ்ச்சி பிக்பாஸ். அதிலும் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். பிக் பாஸ் சீசன் 1 சினேகன், ஜூலி, காயத்ரி, சக்தி, ஆரவ், ஓவியா, நமீதா என பலர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஓவியா. இவருக்காக ரசிகர்கள் ஓவியா ஆர்மி வைத்து அவரை கொண்டாடினார்கள்.

தமிழ் சினிமாவில் விமல் நடித்த களவாணி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஓவியா. அதன் பின்னர் மெரினா, கலகலப்பு, புலிவால் போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில் அவரின் தீவிர ரசிகர்களில் ஒருவரான சான்வி என்பவர் திடீரென சமீபத்தில் மரணமடைந்துள்ளார், மேலும் அவரின் மிக ஆசையே நடிகை ஓவியாவை ஒருமுறையாவது சந்திக்க வேண்டும் என்பது தான். இந்த தகவலை அறிந்த நடிகை ஓவியா “சான்வியின் பெற்றோர்களை தான் சந்திக்க விரும்புவதாகவும், அவர்களை தொடர்புகொள்ள தனக்கு யாராவது உதவுங்கள்” என கூறியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published.