நடிகை ஐஸ்வர்யா ராய் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார்.. அவரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. மும்பையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பிரபல பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு மட்டுமின்றி ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆரத்யாவிற்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் சிகிச்சைக்கு பின் குணமடைந்து தற்போது வீடு திரும்பியுள்ளார்.

 

அபிஷேக் பச்சனின் மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார். இவருக்காக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆகியோர் பிராத்தனை செய்து வருகிறார்கள். ஆனால் கடந்த 18 ஆம் தேதி அதிகாலை ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆரத்யாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதனால், இருவரும் அமிதாப் மற்றும் அபிஷேக் சிகிச்சை பெற்றுவந்த நனாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது இருவரும் குணமடைந்த செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் அமிதாப் இன்னும் வீடு திரும்பவில்லை. கொரோனாவில் இருந்து குணமடைந்த ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆரத்யா மருத்துவமனையில் இருந்து கார் மூலம் வீடு திரும்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.