நடிகை ஆல்யா தனது செல்ல மகளுடன் நடத்திய போட்டோ ஷுட்!! வைரலாகும் அழகிய புகைப்படம் உள்ளே..

விஜய் டிவியில் பிரபலமான ராஜா ராணி என்ற சீரியலில் பிரபலமானவர் ஆல்யா மனசா. சீரியலில் நடித்து இருவருக்கும் ஏற்பட்ட கெமிஸ்டியால் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஆலியா எந்த சீரியலும் நடிக்காமல் சில நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்தார். சஞ்சீவ் காற்றின் மொழி என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

குடும்பம் சம்மதிக்காததால் இருவரும் திருமணம் செய்து பின்பு ஆல்யா கர்ப்பமான பின்பு அவரது குடும்பத்தினருடன் சேர்ந்தார். லாக்டவுனில் ஆலியாவிற்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. தனது குழந்தைக்கு ஐலா என பெயர் வைத்துள்ளனர். ஆலியா – மானசா ஜோடி அடிக்கடி குழந்தையுடன் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர். அதில், ஆல்யாவை போலவே அவரின் செல்ல மகளும் க்யூட் ரியக்ஸன் கொடுக்கின்றார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பல கருத்துக்களை கூறி வருகின்றனர். இப்போது ஆல்யா ராஜா ராணி 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது படப்பிடிப்பின் இடைவேளையில் ஆல்யா குழந்தையுடன் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அவரும், அவரது குழந்தையும் ஒரே நிற ஆடை அணிந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளனர், அந்த புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.