நடிகை ஆலியா மானசாவின் அடுத்த சீரியல் ப்ரோமோ வெளியானது..! ஆவலுடன் இருக்கும் ரசிகர்கள்..

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் ஆலியா. அதே சீரியலில் ஜோடியாக நடித்த சஞ்சீவ் என்பவரை இவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. ஆலியா சிறுது காலம் சினிமாவில் நடிக்காமல் இடைவெளி விட்டிருந்தார். திருமணத்துக்கு பிறகு சஞ்சீவ் கார்த்திக் ‘காற்றின் மொழி’ சீரியலின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

நடிகை ஆலியா மானசா குழந்தை பிறந்து சில மாதங்களே ஆன நிலையில் மீண்டும் தனது பழைய வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார். மிக விரைவாக உடல் எடையை குறைத்து ஒல்லியாக ஆகிவிட்டார். தற்போது ஆல்யா மானஸாவின் அடுத்த சீரியல் குறித்து எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்நிலையில் சீரியல் குறித்து அறிவித்த ஆல்யா மானஸா, விஜய் டிவி சீரியலில் களமிறங்குவதாகவும், அதனை ராஜா ராணி இயக்குநர் பிரவீன் பென்னட் இயக்குவதாகவும் அறிவித்திருந்தார்.

இந்த தொடரின் பூஜை புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திரு்தார். இந்நிலையில் தற்போது அந்த தொடரின் புரோமோவை வெளியாகியுள்ளது. ராஜா ராணி சீசன் 2 என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடர் முதல் சீசனை போலவே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. போலீஸ் கனவுள்ள நாயகியாக ஆல்யா மானஸா வருகிறார். இது குறித்த காணொளி இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஒரே எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.