நடிகர் அபி சரவணனும், நடிகை அதிதி மேனனும் காதலித்து திருமணம் செய்து பின்னர் பிரிந்துவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் அதிதி மேனன் ஆள் வைத்து அபி சரவணனை கடத்தியதாக செய்திகள் வெளியாகின. வீடு திரும்பிய அபி தன்னை யாரும் கடத்தவில்லை என்றார். இதற்கிடையே அபிக்கும், தனக்கும் திருமணம் நடக்கவில்லை என்று அதிதி தெரிவித்தார். மேலும் அபி மீது பொலிசில் புகாரும் அளித்துள்ளார். இது குறித்து அபி சரவணன் கூறியதாவது, அதிதி மேனனுக்கும், எனக்கும் திருமணம் நடந்தது உண்மையே. கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம் பதிவு திருமணம் செய்து கொண்டோம். அதன் பிறகு 3 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தோம்.

ஒரு நாள் நான் வெளியூர் சென்றிருந்தபோது பீரோ, சூட்கேஸை உடைத்து பொருட்களை எடுத்துக் கொண்டு அதிதி சென்றுவிட்டார். அதிதியை என்னுடன் சேர்த்து வைக்குமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறேன். எங்களுக்கு திருமணம் நடக்கவில்லை என்றும், நான் போலி ஆவணங்களை காட்டி மிரட்டுவதாகவும் அதிதி சொல்வதில் உண்மை இல்லை. திருமணம் நடந்ததற்கான ஆதாரங்களை நான் வைத்திருக்கிறேன்.
சமூக சேவைக்காக திரட்டிய நிதியை வைத்து நான் வீடு, கார் வாங்கியதாக அதிதி கூறியதில் உண்மை இல்லை. கடன் வாங்கித் தான் வீடு, கார் வாங்கினேன். அதிதி ஏற்கனவே கேரளாவில் இருந்தபோது பலர் மீது புகார் தெரிவித்திருக்கிறார்.
ஒரு இயக்குநர் மீது கூட புகார் தெரிவித்தார். அதிதியுடன் சமரசம் செய்து வைப்பதாகக் கூறி சிலர் என்னை காரில் அழைத்துச் சென்று வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று மிரட்டினார்கள். என்று செய்தியாளர்களிடம் கூறினார் இந்நிலையில் தற்போது அதிதி மேனோனை- அபி சரவணன் திருமணம் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது