நடிகை அஞ்சலியா இது? லாக்டவுனில் இப்படி மாறிட்டாங்களே..! வருத்தத்தில் ரசிகர்கள்

அங்காடி தெரு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தவர் நடிகை அஞ்சலி. இப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக திரையுலகில் அமைந்தது. ஜீவா நடித்த கற்றது தமிழ் படத்தின் மூலம் ராம் இயக்கத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. இதனை தொடர்ந்து தூங்க நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், கலகலப்பு என வரிசையாக பல வெற்றிப் படங்களில் நடித்து வந்தார்.

அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார். தைரியமாக என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் முழு உழைப்பை போட்டு நடிக்க கூடியவர் நடிகை அஞ்சலி. இதுவரை கொளு கொளு என பார்த்து அஞ்சலி இப்போது வேறொருவர் போல் இருக்கிறார்.

அதாவது இந்த லாக்டவுனை பயன்படுத்தி அவர் தனது உடல் எடையை குறைத்துள்ளார். புதிய புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். கொளு கொளு என இருந்த அஞ்சலியா இப்படி ஒல்லியாகிவிட்டார். நீங்கள் கொஞ்சம் குண்டாக இருந்தால் தான் அழகாக இருக்கும் என சில ரசிகர்கள் தங்களது வருத்தத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இதோ அவரது புகைப்படம்,

 

Leave a Reply

Your email address will not be published.