3 படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் தடம் பதித்து வெற்றியை நிலைநாட்டினார் ஐஸ்வர்யா தனுஷ். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும் மற்றும் நடிகர் தனுஷின் மனைவி ஆவார். இவருக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். தமிழ்சினிமாவில் இருக்கும் பெண் இயக்குனர்களில் ஒரு முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் தனுஷின் மனைவி.

இவர் தற்பொழுது பிரபல ஒலிம்பிக் வீரரான மாரியப்பனின் வாழ்க்கை வரலாரை ஒரு திரைப்படமாக உருவாக்க இருக்கிறாராம். இந்நிலையில் ஐஷ்வர்யா தனுஷ் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் நடிகைகளுக்கே சவால் விடும் அளவு பேரழகுடன் இருக்கின்றார். இந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். பொதுவாக நடிகைகள் தான் இது போன்ற புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.
நடிகர்களுக்கே சவால் விடுக்கும் அளவு தீவிரமாக யோகாசனம் செய்வதை வாடிக்கையாக இவர் கொண்டுள்ளார். ஐஸ்வர்யா தனுஷ் செய்த இந்த யோகா ஆனது மிகவும் வித்தியாசமாக இருப்பது மட்டுமல்லாமல் தன்னுடைய உடலை இப்படி கூட வளைக்கலாம் என்று ரசிகர்களுக்கு ஒரு பாடமாக இருப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யா தனுஷின் இந்த செயல் அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.