ஐஸ்வர்யா தனுஷ் 3 படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் தடம் பதித்து வெற்றியை நிலைநாட்டினார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும் மற்றும் நடிகர் தனுஷின் மனைவியம் ஆவார். தமிழ்சினிமாவில் இருக்கும் பெண் இயக்குனர்களில் ஒரு முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் தனுஷின் மனைவி. இவர் தற்பொழுது பிரபல ஒலிம்பிக் வீரரான மாரியப்பனின் வாழ்க்கை வரலாரை ஒரு திரைப்படமாக உருவாக்க இருக்கிறாராம்.
நடிகர் தனுஷின் மனைவியும் இயக்குநருமான ஐஷ்வர்யா தனுஷ் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவ்வாறு அவர் வெளியிட்ட இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்கள் இந்த வயதிலும் இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு மிகவும் அழகா இருக்கிறீர்கள் என கூறிவருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க நமது நெட்டிசன்கள் வழக்கம் போல் புகைப்படத்தை விமர்சித்தும் வருகிறார்கள்.
பொதுவாக நடிகைகள் தான் இது போன்ற புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். நடிகைகளுக்கே சவால் விடுக்கும் அளவு தீவிரமாக யோகாசனம் செய்வதை வாடிக்கையாக இவர் கொண்டுள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யா தனுஷின் இந்த செயல் அனைத்து ரசிகர்களுக்கும் முன் உதாரணமாக உள்ளது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளையம் குவித்து வருகின்றனர்.