நடிகர் ஸ்ரீகாந்தின் மகளை பார்த்துள்ளீர்களா? வெளியான அழகிய குடும்ப புகைப்படம்! வாயடைத்து போன ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் ரோஜா கூட்டம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். தனது முதல் படத்திலேயே பல பெண் ரசிகைகள் மத்தியில் சாக்லட் பாய் பட்டத்தை பெற்றவர். அதன் பின்னர் ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, ஜூட், உயிர், மெர்குரி பூக்கள், பூ, ரசிக்கும் சீமானே, துரோகி, சதுரங்கம் என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் தற்போது செளகார் பேட்டை, எதிரி எண் 3 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் ஸ்ரீகாந்த் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது மஹா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகை சினேகாவுடன் பல ஆண்டுகள் காதல் கிசுகிசுக்களில் விழுந்து வந்த ஸ்ரீகாந்த், பின்னர் கடந்த 2007ஆம் ஆண்டு வந்தனா என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இந்நிலையில் ஸ்ரீகாந்த் தனது மகன் மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதனை கண்ட ரசிகர்கள் நடிகர் ஸ்ரீகாந்துக்கு இவ்வளவு பெரிய அழகிய மகளா என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *