நடிகர் விஷ்ணுவை திருமணம் செய்கிறாரா அமலாபால்?

இயக்குனர் விஜய்யை விவாகரத்து செய்த நடிகை அமலாபால், சமீபத்தில் மனைவியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணுவை திருமணம் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் விஷ்ணு, தனது மனைவி ரஜினியை விவாகரத்து செய்துவிட்டதாகவும் இருப்பினும் தங்களது மகன் ஆர்யாவை தான் நல்லபடியாக பார்த்து கொள்வதாகவும் கூறியிருந்தார்.

அதேபோல் இயக்குனர் விஜய்யை கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்த நடிகை அமலாபால், கடந்த ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். இந்த நிலையில் தற்போது விஷ்ணுவை அமலாபால் திருமணம் செய்யவுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் செய்தி பரவி வருகிறது.விஷ்ணு,அமலாபால் இருவரும் இணைந்து சமீபத்தில் வெளியான ‘ராட்சசன்’ படத்தில் நடித்திருந்தனர் என்பதும் அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!