நடிகர் விஷால் கொரோனா தொற்றிலிருந்து மீண்டது எப்படி? வெளியிட்ட வீடியோ இதோ…

தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் மகன் தான் நடிகர் விஷால். தமிழ் திரையுலகில் செல்லமே படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் இவர் நடித்த சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. திரைப்படங்களில் நடிப்பதிற்கு முன்னர் நடிகர் அர்ஜுனிடம், வேதம், ஏழுமலை ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார் விஷால். இதுவரை கிட்டத்தட்ட இருபது படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். விஷால் ஒரு சில படங்களை தயாரித்தும் உள்ளார். இவர் நடித்த ஆம்பள, பூஜை போன்ற படங்களை இவரே தயாரித்துள்ளார். தற்போது இவர் ஒரு நடிகராகவும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் செயல் பட்டு வருகிறார். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான அக்ஷன் மற்றும் அயோக்ய உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

 

இந்நிலையில் இவருக்கும் இவரின் தந்தைக்கும் கொரோனா தோற்று ஏற்பட்டு பின் அதிலிருந்து மீண்டதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் தற்போது இது குறித்து நடிகர் விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு கொரோனா தோற்று ஏற்பட்டது குறித்தும் அதிலிருந்து மீண்டது குறித்தும் பேசியுள்ளார். மேலும் பயப்படாமல் இருப்பதே சிறந்த மருந்தாகவும் அவர் கருதியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *