தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்து இருப்பவர் தளபதி விஜய். உலக அளவில் இவருக்கு பல கோடி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். நடிகர் விஜய் தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தின் ரிலிஸிற்காக காத்துக்கொண்டு இருக்கிறார். ஊரடங்கு காரணமாக தள்ளிப்போனது பொங்கலுக்கு ரிலீசாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய், நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்டோர் நடித்த மெர்சல் படம் சூப்பர் ஹிட்டானது. அந்த படத்தில் விஜய்-நித்யா மேனன் தம்பதியின் மகனாக நடித்தவர் அக்ஷத் தாஸ். அவர் விஜய்யுடன் வந்த காட்சிகளில் ரசிகர்களை கவர்ந்தார். அக்ஷத் தாஸை விஜய் ரசிகர்கள் யாரும் இன்னும் மறக்கவில்லை. இந்நிலையில் அக்ஷத்துக்கு பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இது குறித்து அறிந்த விஜய் அக்ஷத்தை வாழ்த்தியுள்ளார். திறமைசாலிகளை வாழ்த்த தவறாத விஜய் அக்ஷத்தை வாழ்த்தியதில் ஆச்சரியம் இல்லை. இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அக்ஷத் தனக்கு அஜித்துடன் சேர்ந்து நடிக்க ஆசையாக இருப்பதாக கூறியுள்ளார். அக்ஷத்தின் இந்த ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.