நடிகர் விஜய் சேதுபதி உதவி செய்த சில நிமிடங்களில் உயிரிழந்த நடிகை: அதிர்ச்சி வீடியோ

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் மாமனிதன் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் நடைபெற்று வந்தது. அப்போது, அங்கு வந்த வயதான பெண்மணி ஒருவர் விஜய் சேதுபதியிடம் பண உதவி கோரியுள்ளார். ரசிகர்களின் கூட்ட நெரிசலில் இருந்த விஜய் சேதுபதி, சில ரூபாய் நோட்டுகளை எடுத்து வயதான பெண்மணியிடம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய சில நிமிடங்களிலேயே அப்பெண் மயங்கி விழுந்துள்ளார். இதனைத்தொடர்ந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதிலும் அவரை காப்பாற்ற முடியவில்லை. இறந்துபோன அப்பெண்மணியும் ஒரு நடிகை ஆவார். அவர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.