நடிகர் விஜய் சேதுபதி M. குமரன் S/O மஹாலக்ஷ்மி படத்தில் நடித்துள்ளாரா..! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் உள்ளே..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி. மக்கள்செல்வன் என்று தமிழ் ரசிகர்களால் புகழப் பட்டவர் விஜய் சேதுபதி. இவரின் எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் முன்னணி கதாநாயகனாக நடிக்கும் வரை 5 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் சிறு வேடங்களில் நடித்தவர்.

அதனைத்தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் லாக்டவுன் முடிந்தவுடன் இவரின் திரைப்படங்கள் வரிசையாக வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது. மேலும் தளபதி விஜய்யுடன் இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி இவரின் ஆரம்பகாலத்தில் ஏகப்பட்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக புதுப்பேட்டை, லீ, நான் மகான் அல்ல உள்ளிட்ட திரைப்படங்களை கூறலாம். அந்த வகையில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான M.குமரன் S/O மஹாலக்ஷ்மி திரைப்படத்திலும் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். ஆம் அப்படத்தின் ஒரு காட்சியில் குத்துசண்டை பயிற்சியின் பொது ஜெயம் ரவியுடன் இருப்பார் நடிகர் விஜய் சேதுபதி. இதுவரை பலரும் பார்த்திராத அந்த புகைப்படம் இதோ..

Leave a Reply

Your email address will not be published.