நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட நடிகை அக்ஷரா ஹாசன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..! குவியும் லைக்குகள்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் ஒரு நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர், டான்சர், பின்னணி பாடகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். களத்தூர் கண்ணம்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

கே. பாலச்சந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தில் கதாநாயகனாக நடித்தார். அப்படத்திற்கு கமல்ஹாசன் தனது முதல் தேசிய விருதைப் பெற்றார். நடிகர் கமல்ஹாசன் நடிகை சரிகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நடிகை ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆவார். நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது மகளான அக்ஷரா ஹாசன் ஷமிதாப் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழில் விவேகம், கடாரம் கொண்டான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

மேலும் அருண் விஜய், விஜய் ஆண்டனி உள்ளிட்டோருடன் இவர் நடித்த வந்த அக்னி சிறகுகள் திரைப்படமும் லாக்டவுனுக்கு பிறகு வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது இவர் நடித்து வரும் திரைப்படமான அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இதோ அந்த போஸ்டர்..

 

Leave a Reply

Your email address will not be published.