தமிழ் சினிமாவில் இந்த இரண்டு நடிகர்கள், என்றும் மாஸ்ஸான நடிகர்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு இவர்கள் இருவருக்கும் ரசிகர் கூட்டம் உள்ளது. இவர்களது படம் திரைக்கு வருகிறது என்றால் அவர்களது ரசிகர்களுக்கு திருவிழா தான். அந்த அளவிற்கு இவர்களது ரசிகர்கள் மிகவும் ஆர்வம் உள்ளவர்கள். அம்மா நடிகர் அஜித் மற்றும் விஜய் இவர்களை பற்றி தான் சொல்கிறோம். தமிழ் சினிமாவில் இருவருக்கும் நிகரான ரசிகர்கள் உள்ளார்கள்.

இந்நிலையில் , விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த மெர்சல், சர்கார், பிகில் ஆகிய படங்கள் பிரமாண்ட வசூல் சாதனை செய்தது. அதிலும் பிகில் படம் ரூ 300 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது, இந்நிலையில் விஜய் அடுத்து மாஸ்டர் படத்தில் நடித்து வருகின்றார், இப்படத்திற்காக தான் ரூ 80 கோடி சம்பளமாக பெற்றதாக வருமான வரித்துறையினரிடம் விஜய்யே அறிவித்தார். இதை தொடர்ந்து, தன்னுடைய அடுத்த படத்திற்கு விஜய் எப்படியும் ரூ 100 கோடி வரை சம்பளமாக பெறுவார், என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த செய்தி ஒட்டு மொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் ஷாக் ஆக்கியுள்ளதூ, விஜய் தற்போது தன் திரைப்பயணத்தின் உச்சத்தில் இருக்கின்றார். மேலும், இந்த சம்பளமானது கண்டிப்பாக சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு நிகரான ஒரு இடத்தில் தான் விஜய் உள்ளார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. டோலிவுட்டில் அதிகம் சம்பளம் பெரும் நடிகர்கள் வரிசையில் நடிகர் விஜயும் ஒருவர், என்று தான் சொல்ல வேண்டும்.