நடிகர் விஜய்க்கு இந்த ஒரு படத்தை ரீமேக் செய்ய ஆசையாம்.. எந்த படம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்து இருப்பவர் தளபதி விஜய். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும் மற்றும் உச்ச நட்சத்திரமாக விளங்கிறார். தமிழ் சினிமாவில் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் சினிமா உலகில் பல சாதனைகளை படைத்தது உள்ளார். உலக அளவில் இவருக்கு பல கோடி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸில் கூட பல 100 கோடி படங்களை கொடுத்து தற்போது நம்பர் 1 இடத்தில் இருந்து வருகிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் பிகில். இப்படம் வசூலில் 300 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. நடிகர் விஜய் தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தின் ரிலிஸிற்காக காத்துக்கொண்டு இருக்கிறார். ஊரடங்கு காரணமாக தள்ளிப்போய்வுள்ளது.

தளபதி விஜய் பல ரீமேக் படங்களில் நடித்துள்ளார், ஏன் ரீமேக் படங்களான கில்லி மற்றும் போக்கிரி படங்கள் தான் விஜய்யின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இந்நிலையில் தளபதி விஜய்க்கு சத்யராஜ் நடித்து மணிவண்ணன் இயக்கி வெளிவந்த அமைதிப்படை படத்தை ரீமேக் செய்ய வேண்டும் என்று ஆசையாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *