நடிகர் விஜயின் மகன் சஞ்சய் வெளிநாட்டில் படிக்கிறார், அவரின் தற்போதைய புகைப்படம்…நம்ம ஆளுனு துண்டா தெரியுதே

தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தளபதி விஜய் இவர் தமிழ் சினிமாவில் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் சினிமா உலகில் பல சாதனைகளை படைத்தது உள்ளார். மேலும் விஜய்க்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். விஜய்யின் மகள் அட்லி இயக்கத்தில் வெளியாகிய தெறி திரைப்படத்தில் ஒரு சிறிய காட்சியில் வந்தார்.

 

அதேபோல் மகனும் விஜய்யின் வேட்டைக்காரன் திரைப்படத்தில் ஒரு சிறிய காட்சியில் வந்திருந்தார். சமீப காலமாக நடிகர் விஜய்யின் மகனான சஞ்சய் குறும் படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதை பற்றி நடிகர் விஜயிடம் நடன இயக்குனர் ஷோபி உங்கள் மகன் இயக்கிய குறும்படம் எப்படி இருக்கிறது என கேட்டுள்ளார். அதற்கு விஜய் சிரித்துக்கொண்டே பையன் வளர்ந்து விட்டான். அவனுக்கு என்ன பிடிக்குதோ அதை செய்யட்டும் என கூறியுள்ளார்.

கொரோனா பாதிப்பு இருப்பதால் சஞ்சய் வெளிநாட்டில் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. அதாவது சங்கீதா விஜய்யின் தந்தை வெளிநாட்டில் தான் தொழில் செய்து வருகிறார். அங்குதான் சஞ்சய் படித்து வருகிறாராம், அதனால் நல்ல ஆரோக்கியமான பாதுகாப்புடன் இருப்பதாக செய்திகள் வெளிவந்தது. வெளிநாட்டில் படிக்கும் சஞ்சயின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Leave a Reply

Your email address will not be published.