நடிகர் விக்ராந்தின் மனைவி இந்த பிரபல சீரியலின் நடிகை தானா? புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் இருப்பார் தளபதி விஜய். பிரபல இயக்குனரின் மகன் என்ற பெயரோடு சினிமாவில் நுழைந்தாலும் தனது கடின உழைப்பால் புகழின் உச்சத்திற்கு சென்றவர் தளபதி விஜய். உலகெங்கும் இவருக்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர். தளபதி விஜயின் சித்தி பையன் தான் நடிகர் விக்ராந்த். 2005ம் ஆண்டு வெளியான கற்க கசடற என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

அதன் பின்னர் நினைத்து நினைத்து பார்த்தேன், முதல் கனவு, நெஞ்சத்தை கிள்ளாதே, எங்கள் ஆசான் போன்ற பல்வேறு படங்களில் நடித்தார் நடிகர் விக்ராந்த். ஆனால் அவர் நடித்த படங்களுக்கு அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவில்லை, 2010ம் ஆண்டு வெளியான கோரிபாளையம் படம் இவருக்கு பெயர் கொடுத்தது என்று கூறலாம். அதனை தொடர்ந்து முதுக்கு முத்தாக, பாண்டிய நாடு, கவண், தொண்டன் போன்ற படங்களின் மூலம் நன்கு அறியப்பட்டார்.

விக்ராந்திற்கு கடந்த 2009ம் ஆண்டு மானஸா என்பவருடன் திருமணம் நடந்தது. இவர் வேறு யாரும் இல்லை தமிழில் ஒளிபரப்பான உதிரி பூக்கள் என்ற சீரியலில் நாயகியாக நடித்தவர் தான். தமிழை தாண்டி மலையாளத்திலும் மக்களுடே அம்மே என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.