நடிகர் வடிவேலுவை மிஞ்சிய பல்கலைக்கழக பேராசிரியரின் விபரீத ஆசை! பெண் துப்புரவு பணியாளரை துரத்திச் சென்று பாலியல் தொந்தரவு!!!

சினிமா பாணியில் நடந்த ஒரு பரபரப்பான சம்பவம் . தாஸ் படத்தில் ஒரு காட்சியில் காமெடி நடிகர் வடிவேலு கழிவறையை சுத்தம் செய்யும் துப்புரவு பெண் தொழிலாளியிடம் நெருங்கி சென்று அடி வாங்கி வருவது போன்ற ஒரு காட்சி இருக்கும். அதுபோல ஒரு சம்பவம்  பிரபல கல்லூரியில் அரங்கேறியுள்ளது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள தாவரவியல் துறையில் பேராசிரியராக பணிபுரிபவர் ஆறுமுகம். அத்துறையின் ஆய்வகத்தில் பணியாற்றிவரும் துப்புரவு பணியாளராக உள்ள இளம் பெண்ணிடம் பேராசிரியர் ஆறுமுகம் என்பவர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இது குறித்து பல்கலைக்கழக பதிவாளரிடம் அந்தப் பெண் கடந்த மாதம் 13ஆம் தேதி புகார் அளித்துள்ளார். கல்லூரி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், அந்த இளம்பெண் இந்த மாதம் 9ம் தேதி அழகப்பாபுரம் காவல் நிலையத்தில் சென்று அந்தப் பேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.

துப்புரவு பணியாளராக வேலை செய்து வரும் அந்த இளம்பெண் அளித்த புகாரின் பேரில் பேராசிரியர் ஆறுமுகம் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.