1998 ஆம் ஆண்டு யாரும் எதிர்பார்க்காத விதமாக இயக்குனர் சசி இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் தான் சொல்லாமலே. லிவிங்ஸ்டன், கவுசல்யா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருந்த இந்த படத்தை ஆர்பி சவுத்ரி தனது சூப்பர் குட் பிலிம்ஸ் மூலம் தயாரித்து இருந்தார். இந்த படத்தின் கதைப்படி படத்தின் நாயகிக்கு பொய் சொல்லுபவர்களையும் ஏமாற்றுபவர்களையும் சுத்தமாக வெறுக்கக்கூடிய கதாபாத்திரம். அதற்கு நேரெதிராக லிவிங்ஸ்டன் கதாபாத்திரம் அமைந்தது.

தான் ஊமை எனக்கூறி அவரைக் காதலித்து வருவார். இறுதியில் உண்மை தெரிந்து விடுமோ என பயந்து தன்னுடைய நாக்கை அறுத்துக் கொண்டு உண்மையாலுமே ஊமையாக மாறிவிடும் அந்த கிளைமாக்ஸ்காகவே படம் 100 நாட்கள் ஓடியது. தமிழ் சினிமாவில் பல்வேறு விதமான காதல் கதைகள் வந்தாலும் அதில் ஒரு சில படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைக்கும். பெரிய ஹீரோவாக இல்லை என்றாலும் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று விடும்.
அந்த படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தவர் பிரபு தேவா. அந்த காலகட்டத்தில் பிரபுதேவா ஒரு ஸ்டைலிஷ் ஹீரோவாக வளர்ந்து வந்து கொண்டிருந்ததால் இந்த படத்தை நிராகரித்து விட்டாராம். மேலும் ஹீரோவுக்கு தாழ்வுமனப்பான்மை ஏற்படும் கதாபாத்திரங்களில் இனி நடிக்கப் போவதில்லை என கூறியதால் விரக்தியில் லிவிங்ஸ்டனை ஹீரோவாகப் போட்டு படம் எடுத்தாராம் சசி.