நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. வருத்தத்தில் ரசிகர்கள்..

நாளுக்கு நாள் கொரோனா தொற்று நாடு முழுவதும் மிக வேகமாக பரவிவருகிறது. இதனால் உலகி பல்வேறு பகுதிகளில் பொது முடக்கம் அமலில் இருந்தது. தற்போது ஊரடங்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பல பகுதிகளில் தளர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,560 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

தற்போது தமிழகத்தில் களத்தில் பணியாற்றும் நபர்களுக்கு கொரோனா உறுதியாகி வந்தது. கொரோனா தொற்றால் சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் பல திரைப்பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பிரபல முன்னணி நடிகரான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் ராமராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். லேசான அறிகுறியுடன் இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக-வின் பேச்சாளராக பொறுப்பு வகித்தார். 1998ல் திருச்செந்தூர் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.