நடிகர் யோகி பாபுவிற்கு கவுண்டமணி கொடுத்த அட்வைஸ்! பேட்டியில் உடைத்த உண்மை..

பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் தன்னை முன்நிறுத்திக் கொண்ட யோகி பாபு தற்போது தமிழ் திரையுலகில் தற்போது உள்ள முன்னணி காமெடி நடிகர்களில் மிகவும் பிரபலமாக விளங்கி வருபவர் நடிகர் யோகி பாபு. ஆம் நடிகர் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். இவர் ரஜினி, அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் தற்போது பல்வேறு படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகி பாபு. இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற யோகி பாபு, கவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம் குறித்து பேசியுள்ளார். அதில், அவர் கூறியதாவது, “கவுண்டமணி சார் சொன்ன ஒரு அட்வைஸைத்தான் இப்போவரைக்கும் பாலோ பண்ணிட்டு இருக்கேன்.

முதல் முறை அவரை மீட் பண்ணும்போது, தம்பி யோகி பாபு, நீ எதை நோக்கி ஓடுறியோ அதை நோக்கி ஓடிட்டே இரு. எவனாவது கூப்பிடுறான்னு திரும்பிப் பார்த்தா, உன்னைத் திண்ணையில உட்கார வெச்சுடுவாங்க. உன் இலக்கு மட்டும்தான் உன் கண்ணுக்குக் தெரியணும்’னு சொன்னார்”. இப்போ வரைக்கும் அப்பப்போ சார்கிட்ட பேசுவேன் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.