தமிழ் திரையுலகில் தற்போது உள்ள முன்னணி காமெடி நடிகர்களில் மிகவும் பிரபலமாக விளங்கி வருபவர் நடிகர் யோகி பாபு. கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான யோகி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் தன்னை முன்நிறுத்திக் கொண்ட யோகி பாபு தற்போது நடிகர் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றார்.
தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்து கோலமாவு கோகிலா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தற்போது பல்வேறு படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் யோகி பாபு. இந்நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி வேலூரைச் சேர்ந்த மஞ்சு பார்கவி என்ற பெண்ணை குலதெய்வ கோயிலில் எளிமையாக திருமணம் செய்தார்.
இத்தம்பதிகளின் வரவேற்பு மார்ச் மாதம் நடைபெறவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது யோகிபாபு மஞ்சு பார்கவி தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் திரைத்துறை நண்பர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.