நடிகர் தனுஷ் வீட்டில் நடந்த விஷேசம்! மனைவி வெளியிட்ட புகைப்படம்…

தனுஷ் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமையில் படத்தில் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தனுஷ் செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் திரைப்படமும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இதன் பிறகு வெளியான திருடா திருடி மற்றும் தேவதையைக் கண்டேன் போன்ற திரைப்படங்களின் மூலமாக தனது திரையுலக செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டார்.

இவர் ஆடுகளம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 2011ல் சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றார். தனுஷ் தனது உண்டர்பார் ஃபிலிம்ஸ் மூலமாக படம் தயாரிக்கிறார். இவருக்கு சிறந்த நடிகர் விருது மட்டுமல்லாமல் இவருடைய தயாரிப்பில் வெளிவந்த விசாரனை படத்திற்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது. நடிகர் தனுஷ் தனது 37ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையடுத்து ரசிகர்களும் திரைத்துறை பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, நடிகர் தனுஷின் மனைவியும் இயக்குநருமான ஐஷ்வர்யா தனுஷ் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். குடும்பத்துடன் சிம்பிளாக பிறந்தநாளை கொண்டாடிய தனுஷின் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். பின்பக்கமாக திரும்பி நின்றபடி, ஃபன்க் ஹேர்கட்டுடன் ஸ்டைலாக இருக்கும் தனுஷின் லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வைரல் ஆகி வருகின்றது.

 

 

View this post on Instagram

 

♥️♥️

A post shared by Aishwaryaa R Dhanush (@aishwaryaa_r_dhanush) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *