தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் பொல்லாதவன், யாரடி நீ மோகினி, ஆடுகளம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்திய அளவில் கவனம் பெறுகிறது. மேலும் தற்போது தனுஷுடன் முதன் முறையாக கைகோர்துள்ளர் கார்த்திக் நரேன்.

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன். கடைசியாக இவர் நடிப்பில் பட்டாஸ் திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது, அதனை தொடர்ந்து இவர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் திரைப்படத்தில் நடித்து முடித்தார். இப்படமும் விரைவில் வெளியாகும் என நம்பபடுகிறது, மேலும் இவர் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்திலும் நடித்து வந்தார்.
இந்நிலையில் நடிகர் தனுஷ் பாலிவுட் திரைப்படமான அத்ராங்கி ரே திரைப்படத்தின் படப்பிடிப்பில் சமிபத்தில் இணைந்துள்ளார். காரைக்குடியில் நடைபெற்ற இப்படத்தின் படிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் கேமராவில் அவரின் தலையை வைத்தபடி புகைப்படத்தை வெளியிட்டு, “எனது உண்மையான காதலை ரொம்ப மிஸ் பண்ணேன்” என் கேப்ஷன் போட்டுள்ளார்.