நடிகர் ஜெயம் ரவியின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா? பலரும் பார்த்திராத அரிய புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை இந்த குடும்ப படங்களுக்கும், சென்டிமன்ட் படங்களுக்கும் மவுசு அதிகம் தான். இன்று ஆயிரம் படங்கள் வந்தாலும் எதாவது ஒரு குடும்ப சென்டிமன்ட் திரைப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெறுகிறது. இப்படி அம்மா சென்டிமன்ட், அப்பா சென்டிமன்ட், தங்கச்சி சென்டிமன்ட் என அணைத்து படங்களும் வெற்றியை பெறுகின்றன. தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜெயம் ரவி.

இந்த திரைப்படத்தில் பல நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். நடித்த முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார். அதன் பின்னர் எம்.குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தனி ஒருவன் போன்ற பல்வேறு வெற்றி படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் மோகன் ராஜா மற்றும் ஜெயம் ரவி இருவருமே தயாரிப்பாளர் மோகன் அவர்களின் மகன்கள் என்பதை திரையுலமே அறியும்.

ஆனால் இதுவரை நடிகர் ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜாவின் அம்மாவை திரையுலக ரசிகர்கள் பலரும் பார்த்ததில்லை. இந்நிலையில் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியின் அம்மா வரலட்சுமி மோகன் அவர்களின் புகைப்படம் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *