நடிகர் சூர்யா சிறு வயதில் எப்படி உள்ளார் பாருங்க..! புகைப்படங்கள் இதோ..

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருவபவர் நடிகர் சூர்யா. சினிமா துறை மட்டுமின்றி சமூகத்தின் மீதும் அக்கரைக் கொண்ட ஒரு நல்ல மனிதராகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர். இவர் தற்போது இயக்குனர் சுதா இயக்கத்தில் தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்து முடித்திருக்கும் படம் சூரரை போற்று. இப்படம் வரும் அக்டோபர் மாதம் 30ம் தேதி ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தார் நடிகர் சூர்யா.

இதனால் பல விதமான சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார் நடிகர் சூர்யா. இவருக்கு எதிராக திரையுலக விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். இவர் நடிப்பில் சூரரை போற்று படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ். தானு தயாரிப்பில் வாடி வாசல் எனும் படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் முதல்முறையாக உருவாகவுள்ள திரைப்படம் வாடிவாசல். இது ஒரு புறம் இருக்க நடிகர் சூர்யாவின் இதுவரை நீங்கள் பார்த்திராத அவரின் சிறு வயது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *