சினிமாவில் சில முன்னணி நடிகர்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருக்கிறார்கள். குறிப்பாக நாம் விஷால், ஆர்யா, சிம்புவை கூறலாம். ஆனால் இதில் ஆர்யாவுக்கு வரும் 10ம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடக்கிறது, விஷாலுக்கு பெண் எல்லாம் முடிவாகிவிட்டது. ஆனால் சிம்புவுக்கு காதல்களும் காதல் தோல்விகளும் என புத்தகமே போடும் அளவுக்குப் போய்விட்டது அவரது தனிப்பட்ட வாழ்க்கை. சாதாரண ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை யாரும் எட்டிப்பார்ப்பதில்லை. ஆனால் பல கோடி பேர் பார்த்து ரசிக்கும் சினிமாவில் இருப்பவர்களின் வாழ்க்கை யார் கண்ணிலும் தப்புவதில்லை அவருக்கு திருமணம் எப்போது என்று கேட்டால் ஒரு பதிலும் இல்லை.
இந்த நேரத்தில் தான் ஒரு விஷயம் வெளியாகியுள்ளது, அதாவது டி.ராஜேந்தர் அவர்களின் இரண்டாவது மகன் குறளரசனுக்கு மிகவும் சிம்பிளாக வரும் ஏப்ரல் 26ம் தேதி நடக்க இருக்கிறதாம். அவர் மதம் மாறியதும் காதலிக்காக தான் என்று கூறப்படுகிறது