நடிகர் சிபி ராஜின் மனைவி, மகன் பார்த்துள்ளீர்களா? வெளியான அவரின் அழகிய குடும்ப புகைப்படம்

சினிமாவில் ஒரு காலத்தில் ரஜினி, கமல், கார்த்திக், பிரபு போல ஹீரோவாக கலக்கியவர் நடிகர் சத்யராஜ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் 200 அதிகமான படங்களில் நடித்துள்ளார். சமீபகால வருடமாக முக்கியமான வேடங்களில் மட்டும் படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு சிபி ராஜ் என்று ஓர் மகன் இருக்கிறார். நடிகர் சிபி ராஜ் ஸ்டூடண்ட் நம்பர் ஒன் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

 

ஜோர், வெற்றி வேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ், லீ என படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். அவரின் நடிப்பில் வந்த நாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன் துரை ஆகிய படங்கள் பலருக்கும் பிடித்து போனது. கடைசியாக வந்த வால்டர் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. தற்போது மாயோன், ரங்கா, வட்டம், கபடதாறி ஆகிய படங்கள் கையில் இருக்கின்றன. முழுமையான வெற்றிக்காக அவரும் தொடர்ந்து போராடி வருகிறார்.

2008 ல் ரேவதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்வே இருவரும் 10 வருடமாக காதலில் இருந்ததனர். இவர்களுக்கு இரண்டு ஆண்குழந்தைகளும் பிறந்தன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மனைவி மற்றும் மகன்களுடன் சிபிராஜ் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் ரசிகர்கள் அவரின் மகன்கள் வளர்ந்துவிட்டதை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.