நடிகை ராதிகா தனது கணவர் சரத்குமார், மகள் ரயன் மிதுன், பேரனுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்த ஒருவர் அசிங்கமாக கலாய்த்தார். இதை பார்த்த ரயன் அந்த நபருக்கு பதிலடி கொடுத்துள்ளார். சரத்குமார் தன் தந்தை என்று ரயன் பெருமையுடன் தெரிவித்துள்ளார். ரயன், ராதிகாவின் முந்தைய திருமணம் மூலம் பிறந்த பிள்ளை என்றாலும் தனது சொந்த மகள் போன்று தான் பார்க்கிறார் சரத்குமார். இந்நிலையில் அவரை நெட்டிசன் கலாய்த்ததை பார்த்த ரயன் விளாசியுள்ளார்.
ராதிகாவின் முதல் கணவர்
சரத்குமார் தனது இரண்டாவது பொண்டாட்டி ராதிகாவின் முதல் புருஷன் பொண்ணோட பையனுடன் உள்ளார், ஆசிர்வதிக்கப்பட்டவர் என்று கலாய்த்தவரை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கியுள்ளார் ரயன். வழக்கமாக இது போன்று கலாய்ப்பவர்களை கண்டுகொள்ள மாட்டேன். நான் சிறு வயதில் இருந்தே இதை எல்லாம் பார்க்கிறேன். ஒரு குழந்தையுடன் கணவரை பிரிந்து வர தனி தைரியம் வேண்டும்.
v
அப்படி வந்து ஒரு தொழிலை துவங்கி அதை வெற்றிகரமாக நடத்துவது எளிது அல்ல என்று தன் அம்மா ராதிகா பட்ட கஷ்டங்களை விவரித்துள்ளார் ரயன். சரத்குமார் தன்னை ஒரு நாளும் பாரமாக நினைத்தது இல்லை என்றும், தன் சொந்த மகளாகவே பாசம் காட்டுவதாகவும்,
அதற்கும் மனது வேண்டும் என்று ரயன் தெரிவித்துள்ளார். என் தந்தை ஆசிர்வதிக்கப்பட்டவர் தான். அவருக்கு அருமையான மனைவி, 4 பிள்ளைகள், ஒரு பேரன், அவர் மீது பாசம் வைத்திருக்கும் குடும்பம் உள்ளது என்கிறார் ரயன்.
This is the type of world, we live in. And YES, dad is super blessed. Why wouldn’t he be? He’s got an amazing wife, 4 children, a grandson and a family who love him more than life itself. pic.twitter.com/WlCipDTqeO
— Rayane Mithun (@rayane_mithun) February 7, 2019