கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது ஆர்யா – சாயிஷா இடையே காதல் மலர்ந்ததாக செய்திகள் வெளியாகின. கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி, தனது டுவிட்டர் பக்கத்தில் இருவரும் தங்கள் காதலை வெளிப்படையாக அறிவித்திருந்தனர். இதற்கு இருவர் வீட்டிலும் சம்மதம் தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து இவர்களது திருமணம் மார்ச் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் ஐதராபாத்தில் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 9ஆம் தேதி ஆர்யா – சாயிஷா சங்கீத் நிகழ்ச்சி நடந்தது. இதில் பாலிவுட்டின் பிரபலமான சஞ்சய் தத், முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு, தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். சென்னையில் வரும் 14ஆம் தேதி ஆர்யா – சாயிஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது திருமண வீடியோ பதிவு இதோ