தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜயகுமார். நாட்டாமை, நட்புக்காக, கிழக்கு சீமையிலே போன்ற பல வெற்றிப் படங்களில் குணசித்தர நடிகராக நடித்துள்ளார். சின்னத்திரையில் தங்கம், வம்சம், நந்தினி போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார். நடிகர் விஜயகுமார் முத்துக்கன்னு என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு கவிதா, அனிதா மற்றும் நடிகர் அருண் விஜய் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
அதன்பின்னர் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நடிகை வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி என மூன்று மகள்கள் உள்ளனர். நடிகர் அருண் விஜய் முறை மாப்பிளை படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் பிரியம், காத்திருந்த காதல், பாண்டவர் பூமி, இயற்கை, தவம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தல அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் பிரபமானார். தற்போது தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வரும் வருபவர் நடிகர் அருண் விஜய்.
இந்நிலையில் அருண்விஜய் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். நடிகர் அருண்விஜய் கடற்கரையில் இயற்கையை ரசித்தவாறு அவரின் செல்லப்பிராணியுடன் அமர்ந்துள்ளார். புகைப்படத்தினை வெளியிட்டு ‘ஒரு அழகான நாள் ஒரு அழகான மனநிலையுடன் தொடங்குகிறது …’ என்றும் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் குறித்த புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.