நடிகர் அருண் விஜய்யின் வீடா இது..! வாயடைக்க வைக்கும் பிரமாண்டம்..! இணையத்தில் கசிந்த புகைப்படம்..

அருண் விஜய் ஓர் தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் நடிகர் விஜயகுமாரின் மகன் ஆவார். சேரன் இயக்கிய பாண்டவர் பூமியில் அருண் விஜய் நடித்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது. அதன்பின்னர் மலை மலை, இயற்கை, தடையறத் தாக்க, மாஞ்சா வேலு ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் அருண் விஜய் வாரிசு நடிகர் என்கிற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் கால் பதித்து, பல்வேறு தோல்விகள், சோகங்களுக்கு அடுத்து தன்னுடைய திறமையை நிரூபித்து வருபவர்.

கௌதம் மேனன் இயக்கி அஜித் குமார் நடித்த படம் என்னை அறிந்தால். இப்படத்தில் அருண் விஜய்யின் விக்டர் கதாபாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பை இவருக்குப் பெற்றுத் தந்தது. அதன்பின்னர் குற்றம், செக்க சிவந்தா வானம், தடம் என அணைத்து படங்களும் வெற்றிப் படமானது. அவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் எப்போதுமே இருக்கும்.

ஊரடங்கில் அவரின் ரசிகர்கள் அவர் பற்றிய தகவல்களை அடிக்கடி வைரலாக்கி வருகின்றனர். அண்மையில் அவரின் உடற்பயிற்சி காணொளிகள் இணையத்தில் வைரலானது. தற்போது அவரின் பிரமாண்ட வீட்டின் புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கியுள்ளனர். நடிகர் அருண் விஜய் பிக் பாஸ் புகழ் வனிதாவின் தம்பி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.