நடிகர் அருண் விஜய்யின் மொத்த குடும்பத்தையும் பார்த்துள்ளீர்களா? வனிதாவா இது! வெளியான அரிய புகைப்படம்

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார். நாட்டாமை, கிழக்கு சீமையிலே, நட்புக்காக போன்ற பல்வேறு வெற்றிப படங்களில் நடித்துள்ளார். இவரின் மகன் தான் நடிகர் அருண் விஜய். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க பல ஆண்டுகளாக போராடி பல தோல்விகளை சந்தித்து இன்று வெற்றி நாயகனாக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். வித்யாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து வெற்றிக்கு மேல் வெற்றி பெற்று வருவதோடு முன்னணி நடிகர்களுக்கு இணையாக வசூல் சாதனையும் புரிந்து வருகிறார்.

தற்போது  நடிகர் அருண் விஜய் அவர்களின் மகனுமாகிய அர்னவ், நடிகர் சூர்யாவின் 2டி என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகிறார். இப்படத்தில் முதன்மை பாத்திரமான அர்னவிற்கு தந்தையாக அவரது தந்தை நடிகர் அருண் விஜய் நடிக்கிறார். இப்படம் நடிகர் அருண் விஜய் அவர்களின் 32வது படமாகும். நடிகர் விஜயகுமாரின் மகன் மற்றும் மகள்கள் எடுத்த பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அதில் வனிதாவை கண்டுப்பிடித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இதேவேளை, தற்போது குடும்ப பிரச்சினை காரணமாக வனிதா அவரின் குடும்பத்தினை பிரிந்து தனிமையில் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றார். இப்படியான நிலையில் மிக அரிய புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.