நடிகர் அஜித்தும் நகைச்சுவை நாயகன் வடிவேலும் 19 ஆண்டுகள் இணையாதற்கு இது தான் காரணமா.

வடிவேலு ராஜ்கிரண் தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ என்ற திரைப்படத்தில் மூலம் ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதை சாதகமாக மாற்றி அதில் பின்னணி பாடகராகவும் தோன்றினார் ,போடா போடா புண்ணாக்கு’ என்ற பாடல் மூலம் திரையில் தோன்றிய இவர், தனக்கு கிடைத்த முதல் படத்திலே இவரிடம் இருந்த அசாத்திய தன்மையினால் . அதன் பிறகு, மற்றுமொரு தயாரிப்பாளர் நடராஜன் மூலம், 1992 ஆம் ஆண்டு ஆர். வி. உதயகுமார் இயக்கத்தில் ‘சின்னகவுண்டர்’ என்ற படத்தில் கதாநாயகன் விஜயகாந்திற்கு குடை பிடிக்கிற பண்ணையாளர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . இத்திரைப்படத்திற்கு பிறகு காலம் செல்ல செல்ல , ஆர்.வி. உதயகுமார் பிரபு, கார்த்திக், கமல் என அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்துகொண்டிருந்த கதாநாயகர்களின அறிமுகம் கிடைக்கப்பெற்றது.

நடிகர் அஜித் தென்னிந்தியாவின் பிரபலம் ஆவர் . இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா,கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 ,பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்று அன்போடு அழைக்கிறார்கள் அஜித் குமார், இவர் ஏராளமான கார் பந்தயங்களில் கலந்துகொண்டு அவர் மண்ணுக்கு பெருமையை தேடித்தந்துள்ளார்.

இயக்குனர் எழில் இயக்கத்தில் ராஜா எனும் திரைப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பின்போது இவர்கள் இருவருக்கு இடையே கருது வேறுபாடு இருந்துள்ளது இந்த பிரச்னையினால் இவர்கள் இருவரும் இணையாததற்கு காரணம் என்று இயக்குனர் எழில் பேட்டி ஒன்றில் இதனை குறிப்பிட்டுள்ளார் .