ஒரு காலத்தில் நடிப்பின் மூலம் பலரை அடிமையாக்கிய பிரபல நடிகை ரோஜா, உணவகம் ஒன்றில் சமையல் செய்யும் காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகங்களை போன்று ஆந்திராவிலும் அண்ணா உணவகம் என்ற பெயரில் மலிவு விலை உணவகங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகர தொகுதி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏவும், நடிகையுமான ரோஜா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிற்கு எதிராக தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார்.
அதன்படி, அண்ணா உணவகம் என்ற திட்டத்திற்கு எதிராக, ரோஜா தனது பிறந்த நாளையொட்டி கடந்த மாதம் 17ஆம் திகதி ஆர்.கே. ரோஜா எனும் அறக்கட்டளை மூலமாக ‘
ஒ.ய்.எஸ் ராஜன்னா ’ என்ற பெயரில் நடமாடும் மலிவு விலை உணவகத்தை நகரியில் ஆரம்பித்திருந்தார்.
இந்த உணவகத்திற்கு பொதுமக்களிடையே அதிக வரவேற்பினை பெற்றுள்ளது. தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒ.ய்.எஸ். ராஜன்னா உணவகத்தில் சாப்பிடுகின்றனர். இந்நிலையில் ரோஜா நேற்று ஒய்எஸ் ராஜன்னா உணவகத்திற்கு சென்று பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் உணவை அவரே சமைத்துள்ளார். இந்த காட்சிகளே சமூகவலைத்தளத்தில் தற்போது தீயாக பரவி வருகிறது.
இதேவேளை, தெலுங்கு பாடலின் பின்னணியில் நடிகை ரோஜா சமையல் செய்யும் காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது