நாங்கள் நித்தியை விட்டு வரமாட்டோம்..! வீடியோ பதிவிட்டு அதிர்ச்சியளித்த பெண் சீடர்கள்..! பரபரப்பான தகவல்!

சமீப நாட்களாக நம்மளை பரபரவில் வைத்துள்ளனர் தான் சாமியார் நித்தியானந்த. ஒரு நாளைக்கு ஒருமுறையாவது அவரை பற்றி செய்திகள் வராமல் இருக்காது. தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது..குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நித்தியானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமம் உள்ளது. இங்கு தங்கியிருந்த தன்னுடைய 2 மகள்களையும் மீட்டுதர வேண்டும் என்று கர்நாடகாவை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் போலீசில் புகார் தந்தார். நித்யானந்தா வெளிநாடு தப்பிச்சென்ற போது ஜனார்த்தன சர்மாவின் மகள்களையும் அவருடன் அழைத்து சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தை தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே மாயமான நித்யானந்தாவை தேடும் பணியினையும் குஜராத், பெங்களூர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில் ஜனார்த்தன் தொடங்கிய வழக்கில் அவரது மகள்கள் தத்துவ ப்ரியா மற்றும் நித்ய நந்திதா ஆகியோர் காணொளி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.

அதில், “நாங்கள் சந்தோஷமா இருக்கிறோம். ரொம்ப சுதந்திரமாக இருக்கோம்.. அப்பாவால் தான் எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது. எங்களுக்கு இந்தியாவுக்கு வர விருப்பம் இல்லை” என்றனர். எனினும் நீதிபதிகள் இதுகுறித்து ஜனவரி 16ம் தேதிக்குள் இருவரும் வாக்குமூலம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அவர்கள் இருக்கும் இடத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் நேரில் சென்று ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published.