நகைச்சுவை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? புகைப்படம் இதோ…

தமிழ் திரையுலகில் 1965 இல் டைரக்டர் ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான வெண்ணிற ஆடை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நகைச்சுவை நடிகர் வெண்ணிற தாய் மூர்த்தி. அத்திரைப்படத்தில் அவர் நடித்ததன் மூலம் அவருக்கு வெண்ணிற ஆடை மூர்த்தி என்ற பெயரும் வழங்கப் பட்டது. நகைச்சுவை நடிகர் மூர்த்தி உலக மக்கள் அனைவரையும் தனது சிரிப்பால் கட்டிப்போட்டவர். நகைச்சுவை நடிகர் வெண்ணிற மூர்த்தி பல்வேறு தமிழ் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையில் வெளிவரும் சீரியல்களிலும் நடித்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் மூர்த்தி இந்திய சினிமா திரை உலகில் 300 – க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இன்றுவரை நடித்துள்ளர். வெண்ணிற ஆடை மூர்த்தி தனது உடல்நிலை காரணமாக கடந்த “இரண்டு” வருடங்களாக எந்தவொரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இவர் தனது 83 ஆவது பிறந்தநாளை கடந்த சில தினங்களுக்கு முன்பு செலபிரேட் செய்துள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் வெளிவரும் இவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்களிடையே நகைச்சுவை நடிகர் மூர்த்தியாய் இவர்? என்ற கேள்வி எழுந்தது. மேலும் இவர் தனது வயதின் காரணமாக இந்நிலையில் இருக்கிறார் என்பதை அறிந்த ரசிகர்கள் இவரது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி வைரலாக்குகிறார்கள். அதன் வாயிலாக வெளிவந்த புகைப்படங்களில் சில இதோ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *